Headlines News :
Home » » மருத்துவமனை பெண் ஊழியர் அசிட் வீசி கொலை: அதிர்ச்சியில் வைத்தியசாலை நிர்வாகம்!

மருத்துவமனை பெண் ஊழியர் அசிட் வீசி கொலை: அதிர்ச்சியில் வைத்தியசாலை நிர்வாகம்!

Written By TamilDiscovery on Sunday, July 7, 2013 | 5:00 AM

பதுளை அரசினர் மருத்துவமனை பெண் ஊழியரொருவர் அசிட் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பதுளைப் பொலிஸ் நிலையத்தின் அவசரபிரிவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பதுளையைச் சேர்ந்த கட்டுபெல்லகம பகுதியில் பற்றைக்குள்ளிருந்து குறித்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மரண விசாரணைகளும் இடம்பெற்று அம்மரணம் கொலையென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கொலைக்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் பதுளை அரசினர் மருத்துவமனையில் ஆண் ஊழியராக கடமையாற்றுபவரென்று தெரியவந்ததுடன் அந்நபரும் தலைமறைவாகியிருப்பதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி குறித்த கொலை தொடர்பாக பதுளைப் பொலிஸார் தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template