கோச்சடையான் படத்தில் நடுக்கடலில் ரஜினி டால்பின்களுடன் நீந்துவது போலவும், கொடிய மிருகங்களுடன் சண்டையிடுவதுபோலவும் காட்சிகள் அமைத்துள்ளார்களாம்.
ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம், அதிகபட்ச கிராபிக்ஸ் மற்றும் அதை 3 டிக்கு மாற்றும் பணிகள் காரணமாக தாமதமாகி வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது. நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல். மிருகங்களுடன் பைட்- கோச்சடையான் அப்டேட் இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் காட்சிகள் குறித்து கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்தப் படத்தில் ராட்சத சுறா மீன்களுடன் ரஜினி சண்டையிடுவது போல கிராபிக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது. இப்போது அதற்கு விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சௌந்தர்யா, "கோச்சடையானில் ரஜினி சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. ஆனால் அவர் டால்ஃபின்களுடன் நீந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கொடிய மிருகங்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன.
முதலில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டுத்தான் டிரெய்லர், இசை வெளியிடுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !