Headlines News :
Home » » மர்மமான முறையில் இறந்த இளவரசனின் காதல் மனைவி திவ்யாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

மர்மமான முறையில் இறந்த இளவரசனின் காதல் மனைவி திவ்யாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

Written By TamilDiscovery on Sunday, July 7, 2013 | 5:10 AM

மர்மமான முறையில் இறந்த இளவரசனின் காதல் மனைவி திவ்யாவை வரும் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார் திவ்யாவின் கணவர் இளவரசன். இது தற்கொலை அல்ல கொலை என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுந்தரேசன் கொண்ட அமர்வு, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திவ்யாவை வரும் 8ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, ஆஜராகும் வரை திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template