அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியை கொலை செய்த, கொலையாளியின் திருமண மோதிரம், $108,000க்கு ஏலம் விடப்பட்டு உள்ளது.
கடந்த, 1963ம் ஆண்டு, நவம்பர் 22ம் திகதி, லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவன், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடியை சுட்டுக் கொன்றான்.
கென்னடியை கொலை செய்த தினத்தன்று, ஓஸ்வால்ட் வீட்டில் விட்டுச் சென்ற திருமண மோதிரத்தை, உளவுத் துறையினர் கைப்பற்றினர்.
சிறிது காலம் டெக்சாசில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் அந்த மோதிரம் இருந்தது. பின், அந்த மோதிரம் ஓஸ்வால்ட்டின் மனைவி, போர்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மோதிரத்தை ஏல நிறுவனத்திடம், ஓஸ்வால்ட் மனைவி கொடுத்தார். இந்த மோதிரத்துடன், ஐந்து பக்க கடிதத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
அதில், ´´ஓஸ்வால்ட் சம்பந்தப்பட்ட இந்த மோதிரத்தை வைத்துக்கொள்ள விரும்பவில்லை; 1963, நவம்பர் 22ம் திகதியுடன் சம்பந்தப்பட்ட, எந்தப் பொருளையும் நினைவுகூர விரும்பவில்லை,´´ என, எழுதியுள்ளார்.
கடந்த வாரம், இந்த மோதிரம், $108,000க்கு ஏலம் விடப்பட்டது. இந்த மோதிரத்தை, வாங்கியவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
What are the best casinos for Indian players? - Lucky Club
ReplyDeleteLucky Club was established in 2007 in a small but profitable casino town luckyclub.live in the heart of the Andaman region. lucky club gambling.