ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ள பணிபகிஷ்கரிப்பை தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பானது 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளதுடன் வாராந்த விடுமுறையை கழித்துவிட்டு இன்று திங்கட்கிழமை தமது அலுவலக பணிகளுக்கு திரும்பியுள்ள அரச, தனியார் ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக ரயில் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்துடன் தொடர்புடைய 11 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !