நேபாளத்தில் புத்தர் பிறந்த இடத்திற்கு அருகில் பழைய கிராமம் ஒன்றும் இந்துக் கோவில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திலுள்ள லும்பினியில்தான் கௌதம புத்தர் பிறந்தார். அங்கு பேரரசர் அசோகர், கிறிஸ்து பிறப்பதற்கு முன் தூண்களுடன், செங்கல் கொண்டு கட்டிய ஒரு கோவில் தான் மிக பழமையானதாக கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை விட மிகப்பழமையான ஒரு கிராமமும், கோவிலும் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் கிறிஸ்து பிறப்பதற்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை செயலாளர் சுஷில் கிமிரே கூறுகையில், ‘‘அசோகர் வருவதற்கு முன்பே லும்பினியின் வரலாறு நீளுவதற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.
நேபாள அரசு இந்த சிறப்பான இடத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்’’ என தெரிவித்தார்.
இந்த கோவில் புத்தர் பிறந்த இடத்தில் இருந்து சில நூறு அடி தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !