சூரிய ஒளியில் ஓடும் காரை நெதர்லாந்து மாணவர்கள் தயாரித்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கார்கள் இயங்கி வருகின்றன. தற்போது சூரிய ஒளி சக்தியின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஸ்டெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரிகள் உள்ளன. காரில் மேல் பகுதியில் சூரிய சக்தியை பெறும் பேனல்கள் (தகடுகள்) பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் பெறப்படும் சூரிய ஒளி சக்தி ஸ்டெல்லா பேட்டரியில் சேகரிக்கப்பட்டு மின்சாரமாக மாறுகிறது. அதை தொடர்ந்து கார் இயங்குகிறது. இந்த காரில் ஒரு குடும்பத்தை சேர்நத 4 பேர் வரை பயணம் செய்ய முடியும். இக்கார் சுமார் 600 கி.மீட்டர் தூரம் வரை ஓடக் கூடியது.
சூரிய ஒளி சக்தியில் இயங்கும் இக்காரை நெதர்லாந்தில் உள்ள இந்தோவின் தொழில் நுட்ப பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர். வெவ்வேறு 6 துறைகளை சேர்ந்த 22 மாணவர்கள் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். இதற்காக 1 வருடம் செலவழித்துள்ளனர்.
இதுவே உலகின் சூரிய ஒளி சக்தியின் மூலம் இயங்கும் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home »
Technology
» உலகின் முதலாவது சூரிய ஆற்றல் குடும்ப கார்: நெதர்லாந்து மாணவர்கள் சாதனை!
உலகின் முதலாவது சூரிய ஆற்றல் குடும்ப கார்: நெதர்லாந்து மாணவர்கள் சாதனை!
Written By TamilDiscovery on Tuesday, July 9, 2013 | 12:14 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !