Headlines News :
Home » » இளவரசனின் இறுதி சடங்கு எப்போது? வீடியோ படத்தை பார்த்து விட்டு உத்தரவு!

இளவரசனின் இறுதி சடங்கு எப்போது? வீடியோ படத்தை பார்த்து விட்டு உத்தரவு!

Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 11:56 PM

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே கடந்த 4–ந் தேதி பகல் 12.50 மணிக்கு கல்லூரி மாணவர் இளவரசன் பிணமாகக் கிடந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தந்தை இளங்கோவும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரும் கூறி வருகிறார்கள். தற்கொலை செய்வதற்கு முன்பு இளவரசன் தனது தந்தை மற்றும் காதல் மனைவி திவ்யா ஆகியோருக்கு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இளவரசனின் பிணம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டது. சட்டம் சார்ந்த மருத்துவத் துறை தலைமை நிபுணர் டாக்டர் தண்டர் சீப் தலைமையில் டாக்டர்கள் சதீஷ்குமார். ரவிக்குமார் ஆகியோர் பரிசோதனை செய்தனர். பிண பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டு அந்த காட்சிகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இளவரசனின் தந்தை இளங்கோவிடம் வழங்கப்பட்டது. இளவரசனின் பிணத்தை அவரது பெற்றோர் விரும்பும் சென்னை டாக்டர் டெக்கால் முன்னிலையில் சென்னை அல்லது கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரமேஷ் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சில உத்தரவுகளை பிறப்பித்தனர். இளவரசனின் பிரேத பரிசோதனை வீடியோ படத்தை இன்று பார்வையிடுவதாக அறிவித்தனர். இளவரசனின் பெற்றோர் விரும்பும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் டெக்கால். மத்திய அரசு தரப்பில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தடய அறிவியல் டாக்டர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர். தர்மபுரியில் இளவரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்த 3 டாக்டாகளில் ஒருவர் ஆகியோருடன் சேர்ந்து இளவரசனின் பிரேத பரிசோதனை வீடியோ படத்தை இன்று பார்வையிடுவோம் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

அதன்படி அவர்கள் இன்று வீடியோ படத்தை பார்த்து விட்டு அதன் பிறகு உத்தரவு பிறப்பிக்க உள்ளனர்.அவர்கள் உத்தரவுக்குப் பிறகுதான் இளவரசனின் பிணம் மறுபரிசோதனை செய்யப்படுமா? அல்லது மறு பரிசோதனை செய்யாமல் அப்படியே ஒப்படைக்கப்படுமா என்பது தெரிய வரும். 4–ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு வந்த இளவரசனின் பிணம் 5–ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சவக்கிடங்கு முன்பு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இளவரசனின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்று இன்று காலை இளவரசனின் தந்தை இளங்கோவிடம் நமது நிருபர் கேட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எனது மகனின் பிணத்தை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டால் அதன்படி நடந்து கொள்வோம். மறு பரி சோதனை தேவையில்லை. தர்மபுரியில் நடந்த பிரேத பரிசோதனை போதும், அதில் சந்தேகம் இல்லை என்று கூறி பிணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து பிணத்தை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்வோம். எப்படியோ எனது மகனின் இறுதிச் சடங்கு நல்லபடியாக நடந்தால் போதும். சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்படுவோம். அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய மாட்டோம்.

இவ்வாறு இளவரசனின் தந்தை இளங்கோ கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template