Headlines News :
Home » » எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலோன் எனெர்ஜி நிறுவனம்.

எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலோன் எனெர்ஜி நிறுவனம்.

Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 4:46 AM

இலங்கையில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையைச் சேர்ந்த சிலோன் எனெர்ஜி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ள நிலையில், வழமையாக அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு மேலதிகமாக இந்த நிறுவனம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

தம்மிடம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்ட நிபுணர்கள் குழாம் காணப்படுவதாகவும், தாம் இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் ஹரி குலசிங்க தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template