சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தடிகளினால் கடுமையாக தாக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பணிப் பெண்ணை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார். வெலிகம பிரதேசத்தைச சேர்ந்த 40 வயதுடைய சந்ராணி இந்துலதா என்ற பெண்னே நீர்கொழும்பு வைத்தியசாலையின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். இவர் கடந்த ஒன்றரை வருட காலம் சவூதி அரேபியாவில் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சவூதி அரேபியாவில் எந்தவித தொழில் சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை என்பதால் எமது நாட்டு பெண்களை அங்கு பணிப் பெண்ணாக அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கத்திடம் பல தடைவைகள் எடுத்துக் கூறியுள்ளோம். ஆயினும், அரசாங்கம் எமது பெண்கள் பணிப்பெண்களாக அங்கு செல்வதை நிறுத்தவில்லை. நாம் ஏன் அவ்வாறு கூறினோம் என்பதை இந்தப் பெண் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மூலமாக நேரடியாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
எமது நாட்டைவிட பின்தங்கிய பொருளாதார நிலையில் உள்ள நாடுகள் கூட சவூதி அரேபியாவிற்கு பெண்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளது. எமது ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்வதில்லை என்றார்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !