கனடாவில் லக் மெகான்டிக் நகரில் ரயிலில் வெடிப்பு ஏற்பட்ட பகுதி யுத்த வலயமென அந்த நாட்டு பிரதமர் ஸ்ரிவன் ஹாப்பர் விபரித்துள்ளார்.
மசகு எண்ணெய்யை ஏற்றிய குறித்த ரயிலில் ஏற்பட்ட வெடிப்பில் ஐந்து பேர் பலியாகியிருந்தனர். இதனையடுத்து ஏற்பட்ட தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள 30 கட்டடங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் காணாமல் போன 40 பேரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது நம்பமுடியாத ஓர் அனர்த்தம் எனக் குறிப்பிட்ட ஹாப்பர், விசாரணைகளை நடத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !