யாழ். நல்லூர் செம்மணி வீதியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட யாழ். பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள மாணவர்கள் இருவர் நல்லூர் செம்மணி வீதிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எதற்காக இவர்களைத் தாக்கினார்கள் என்ற விடயம் வெளிப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தென்பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்புக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பிரிவு, ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !