பிரித்தானியாவால் தேடப்பட்டுவந்த ஸ்பெயின் கடத்தல்காரன், மார்க் லில்லி, துணிமணிகள் போடப்பட்டிருந்த ஒரு அறையில் நிர்வாணமாக மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
போதைப்பொருளை கடத்தி விற்றுவந்த ஸ்பெயினின் மார்க் லில்லி என்பவனை பிடிக்க கடந்த 2002-ம் ஆண்டு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவனுக்கு 23 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து தலைமறைவான மார்க் லில்லி, பொலிசாரின் கண்களில் சிக்காமல் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான். அவனை பிடிக்க ஸ்பெயின் பொலிசார் மற்றும் பிரிட்டனின் சோகா பிரிவு பொலிசாரும் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மலாகா ஏரியா அல்ஹுரின் டி லா டோர்ரே என்ற இடத்தில் உள்ள அவனது வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து 40 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அவன், மிகவும் பீதியான ஒரு தூங்கும் அறையில் துணிமணிகள் போடப்பட்டிருந்த இடத்தில் நிர்வாணமான நிலையில் மறைந்து இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டுமுதல் பொலிசாரின் கண்களில் சிக்காமல், வெவ்வேறு பொய்யான அடையாளங்களுடன் சுற்றி வந்த மார்க் லில்லி விரைவில் பிரிட்டன் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான் என்று பிரிட்டன் சோகா பொலிசார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !