ரமழான் மாத நிறைவைக்கொண்டாடும் முகமாக மலேசியாவிலிருந்து தமது சொந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணித்தவர்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் இந்தோனேசிய பெண் ஒருவர் பலியானதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தோனேசிய பதாம் நகரை நோக்கிச்சென்ற மேற்படி படகில் பயணித்த 27 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் சட்ட விரோதமாக வசிக்கும் சுமார் 35 பேர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ரமழான் பண்டிகையை கொண்டாடும் முகமாக தமது சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு பயணத்தை மேற்கொண்ட போது தென் ஜொஹுர் மாநிலத்துக்கு அப்பாலுள்ள கடலில் அந்தப் படகு மூழ்கியுள்ளது.
உயிருடன் மீட்கப்பட்டவர்களில் இரு பெண்களும் 8 மாத பாலகன் ஒருவனும் உள்ளடங்குகின்றான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !