சந்தானம் தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். சந்தானம் தாய் சொல்லைத் தட்டாதவர். அவர் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் நடப்பாராம். படங்களில் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பயன்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.
கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை படத்தில் சந்தானம் நடிக்கிறார். என் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது என்று கிருத்திகா சந்தானத்திடம் கறாராக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் சந்தானத்தின் வசனங்கள் அவரது தாய்க்கும் பிடிக்கவில்லை போன்று. இதையடுத்து இனி தான் நடிக்கும் படங்களில் அருவருப்பான வசனங்களை பேசவே மாட்டேன் என்று சந்தானம் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !