சேதுசமுத்திரம் திட்டம் மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷே நடத்தும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய பங்கேற்க கூடாது. சேதுசமுத்திர திட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்தது ம.தி.மு.க.,தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய கப்பல்கள் கால்வாயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடலில் உள்ள பவளப்பாறைகள், பாசிகள், உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். மீனவர்களின் வாழ்தாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது இளைஞர்கள் போராட்டத்தை திசை திருப்புவதற்காக, டெசோ போராட்டத்தை தி.மு.க., அறிவித்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி., பங்குகளை யாருக்கும் விற்ககூடாது என்பதுதான் எங்கள் கருத்து. தமிழக அரசு வாங்கியது, சற்று ஆறுதல் அளிக்கிறது. அ.தி.மு.க.,- தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க., விளங்குகிறது.
மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகத்திற்கு நாங்கள் போராடி வருகிறோம். நாங்கள் யாரையும் மிரட்டுவது இல்லை. பொதுமக்களே எங்களுக்கு நிதியை அள்ளி தருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !