கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.
கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,
வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய தன்மைமிக்கதெனவும் சிரஞ்சீவித் தன்மையை உண்டு பண்ணக்கூடியதெனவும் குறிப்பிட்டார்.
ஒருவர் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ முடியுமென பரவலாக நம்பப்பட்டு வருவதனால் வாழுங்கலை நிபுணர்கள் இத்தகைய கூற்றினை விரைந்து மறுத்துரைக்கவே செய்வர்.
கேர்பி யூ அமெரிக்கா என்ற இணையத்தளத்தில் தோன்றி இது பற்றி மேலும் விபரிக்கையில்,
உங்கள் உடலில் உள்ள உணவுக் கலோரிகளை விட உயர்வான தன்மை கொண்ட சக்தியைத் தரும் மூலங்கள் இருக்கவே இருக்கின்றன. வெளிச்ச அணுக்கள் அதிர்வலைகள் மற்றும் காற்று ஆகியவற்றிலிருந்தே கலோரிகள் பெறப்படுகின்றன. உங்கள் சக்தி மையங்கள் திறந்திருக்குமாயின் எதுவுமே உங்களுக்கு உணவூட்ட முடியும் என்றார். எது எப்படியிருந்த போதிலும் கடந்த பத்து மாதங்களாக தான் ஏழு வகையான உணவுகளை உட்கொண்டுள்ளதாகக் கூறிய கேர்பி அவை 500 கலோரிகளை மட்டுமே கொண்டிருந்ததென்பதை நிச்சயப்படுத்தினார்.
சராசரி மனிதன் ஒருவன் நாளொன்றுக்கு மூன்றுவேளை உணவுகள் வீதம் மாதமொன்றுக்கு தொண்ணூறு தடவைகள் உணவுகளையும் பத்து மாதங்களுக்கு மேலாக 900 தடவைகள் உணவுகளை உட்கொள்வதாகவும் பட்டியல்படுத்திய அவர் பத்துமாத காலத்தில் தான் ஏழு தவவை உணவுகளையே உட்கொண்டதாகவும் தன்னால் அதிகளவில் சாப்பிட முடியவில்லையெனவும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் உண்மையான உணவுகளை உட்கொள்ளும் போது தான் களைப்படைந்து நோய்வாய்ப்படுவதாகவும் இத்தகைய பிரக்ஞையில் தான் சாப்படும் போது அது தன்னைக் களைப்படையச் செய்து விடுவதாகவும் தற்போதெல்லாம் தான் சாப்பிடும் போது தனது முன்னெச்சரிக்கை உணர்வு அப்படியே அடிப்பட்டுப் போவதை தன்னால் உணர முடிவதாகவும் தெரிவித்தார்.
தான் கடைப்பிடித்துவரும் மூச்சுப்பயிற்சி செயல் முறையை ஏனையோருக்கும் போதிப்பதற்கு தான் தற்போது திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த கேர்பி சிறந்ததும் நிறைந்ததுமான ஆரோக்கிய வாழ்வு முறை குறித்து போதிக்குமாறு தனக்கு பல்வேறு அழைப்புகள் வந்து குவிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எது எப்படியிருப்பினும் மூச்சுப்பயிற்சியாளர்களைப்போன்று வாழ்வதற்கு எத்தனித்த நிலையில் கணிசமான அளவில் மக்கள் மாண்டு போயுள்ளதால் வாழுங்கலை நிபுணர்கள் கேர்பியின் உடல்நலம் குறித்து சிரத்தை கொண்டுள்ளதாக உரிமைபாராட்டியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !