வெலிமட, கெப்பெடிபொல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உயிரிழந்த நபரின் மகள் மற்றும் மருமகன் எனவும் அவர்கள் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (30) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மருமகனுக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு சென்ற அந்நபருக்கும் மகள் மற்றும் மருமகனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினையே இந்த மோதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !