Headlines News :
Home » » டிவிட்டரை திக்குமுக்காட செய்த விஜய் இரசிகர்கள்.

டிவிட்டரை திக்குமுக்காட செய்த விஜய் இரசிகர்கள்.

Written By TamilDiscovery on Monday, September 16, 2013 | 11:11 AM

பொதுவாகவே சமூக வலைத் தளங்களில் நடிகர்களுக்கு இரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

அதிலும் விஜய் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு ஏகப்பட்ட இரசிகர் கூட்டம் உள்ளது. அவ்வாறு உள்ள இரசிகர்கள் தங்களது நாயகர்களை புகழ்ந்து தள்ளுவது தெரிந்ததே.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்தவகையில் அவரை பற்றி டுவிட்டரிலும் ரசிகர்கள் புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள்.

விஜய்க்கு இரசிகர்கள் செய்த டிவிட்க்கள் சிலமணி நேரம் உச்சத்தில் இருந்துள்ளது. டிவிட்டரில் வீ லவ் விஜய் அண்ணா என்பது உலக அளவில் சில மணிநேரம் டிரென்டில் இருந்தது. டிவிட்டரில் விஜய் இரசிகர்கள் வீ லவ் விஜய் அண்ணா என்று போட்டு தங்கள் தளபதியை புகழ்ந்து டிவிட் செய்தனர்.

ஏராளமான இரசிகர்கள் டிவிட் செய்ததால் வீ லவ் விஜய் அண்ணா என்பது டிவிட்டரில் சில மணிநேரம் டிரென்டில் இருந்தது. விஜய் பற்றி அவரது இரசிகர்கள் எழுதிய டிவிட்டில் முன்னணி வகித்த சிலவற்றை இங்கே பார்ப்போம்.

அண்ணா எல்லோரும் ஹீரோவாகலாம். ஆனால் அனைவராலும் அண்ணன் ஆக முடியாது. வீ லவ் விஜய் அண்ணா என்று விஜே ஃபேன் என்பவர் டிவிட் செய்துள்ளார்.

சிரிப்பு போதும் விஜய் அண்ணா டயலாக் பேசணும்னு அவசியமே இல்லை, அந்த ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். ஆவ்வ்வ்வ்!!! என்ன க்யூட் ல ♡♥ வீ லவ் விஜய் அண்ணா என்று ஸ்ரீஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

உடன் பிறப்புகள் விஜய் ஒரு எளிமையான மனிதர். அவர் தனது ரசிகர், இரசிகைகளை தனது உடன்பிறப்புகளாகவே பார்க்கிறார். வீ லவ் விஜய் அண்ணா. உங்கள் இரசிகையாக இருப்பதில் பெருமை என்று தனா ரெட்டி தெரிவித்துள்ளார்.

உலக அதிசயம் என்னைப் பொறுத்த வரை விஜய் அண்ணா தான் முதல் அதிசயம். உலக அதிசயங்கள் அப்புறம் தான் என்று மணிகன்டன் என்பவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் மேலும் பலர் டிவிட் செய்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

உலக அளவில் சிலமணி நேரம் எனினும் முன்னிலையில் இருந்ததென்பது விஜய் இரசிகர்களின் வெறித்தனமான அன்பையே காட்டுகின்றது. jilla thirai vimarsanam, jilla vimarsanam, ஜில்லா திரை விமர்சனம், ஜில்லா விமர்சனம்.

விஜயை பார்த்து கண்ணீர் வடித்த ரசிகை!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template