ஈராக் தலைநகரின் வடமேற்கு பகுதியில் உள்ள கதிமியா மாவட்டத்தில் இன்று காலை ஷியா முஸ்லிம்களை குறி வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்பகுதியில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் மற்றும் ஒரு கார் குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் சந்தைகள், உணவு விடுதிகள் மற்றும் கார் நிறுத்தங்களில் நடந்த கார் குண்டுகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஈவிரக்கமற்ற தாக்குதல் 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் கடந்த 5 வருடங்களாக ஷியா-சன்னி பிரிவினரிடையே கார் குண்டுகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !