சுமார் 60 லட்சம் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயினை சூட்சுமமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று (14) இரவு பாணந்துறை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கிலோ எடை கொண்ட பிரவுண் சுகர் ரக போதைப் பொருளை தகர மீன் ரின் டப்பாவிற்குள் சூட்சுமமான முறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதனை விற்பனை செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதற்கிடையே அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், வர்த்தகர்கள் போல அவர்களை அணுகி போதைப் பொருளுடன் இரண்டு பேரையும் கைது செயதுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !