Headlines News :
Home » » செலவுக்கு பணம் கொடுக்காத தாய் மகனால் கொடூர கொலை!

செலவுக்கு பணம் கொடுக்காத தாய் மகனால் கொடூர கொலை!

Written By TamilDiscovery on Thursday, July 11, 2013 | 11:15 PM

செலவிற்கு பணம் தர மறுத்த தாயை கடப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்த மகன் பொலிசில் சரணடைந்துள்ளார்.

சிவகாசி ரிசர்வ் லைன், சிலோன் காலனி, டீச்சர் காம்பவுண்டில் குடியிருப்பவர் சுந்தர்ராஜன் மனைவி புஷ்பலதா, 40. இவர்களுக்கு 4 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் மீனாவிற்கு திருமணம் நடந்துள்ளது. மற்றவர்கள் தாய், தந்தையுடன் உள்ளனர்.

4வயதில் கடைசி மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் பட்டாசு தொழிலாளர்கள். இவர்களது 3வது மகன் பட்டாசு தொழிலாளி மணிகண்டன், 20.

ஊதாரிதனமாக செலவு செய்பவர். பெற்றோர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று தாய் புஷ்பலதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மதியம் 1.30 மணிக்கு மணிகண்டன் வீட்டிற்கு வந்து தாயிடம், "குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்ல செலவிற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

புஷ்பலதா தன்னிடம் பணம் இல்லை என்றார். ஆத்திரம் அடைந்து வீட்டில் கிடந்த கடப்பாறையை எடுத்து தாயை அடித்து கொலை செய்தார். மணிகண்டன் சிவகாசி டவுன் பொலிசில் சரணடைந்தார். பொலிசார் விசாரிக்கின்றனர்.

தாயை பற்றி தவறாக கூறிய கொலைகார மகன்:
கொலை செய்த மணிகண்டன் டவுன் பொலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தனது தாய் தன்நண்பன் ஒருவனிடம் தவறாக இருந்ததை நேரில் பார்த்ததாகவும், அதனால் கொலை செய்தேன், என முதலில் கூறினார்.

நண்பர் மகேஷிடம் பொலிசார் விசாரித்ததில், இறந்த புஷ்பலதாவிற்கு மகேஷ் தம்பி உறவு முறை.

குறைந்த வயது உடையவர். மணிகண்டன் கூறியதில் உண்மை இல்லை என தெரிந்தது. அதன்பின் செலவிற்கு பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template