Headlines News :
Home » » அண்டார்டிகாவில் 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி உருகுகிறது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

அண்டார்டிகாவில் 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி உருகுகிறது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 6:36 AM

அண்டார்டிகாவில் 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி படலமானது திடீரென சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பனி நிறைந்த ஏரிகள் பெருமளவில் உருக தொடங்கியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

உலகின் 5வது பெரிய கண்டமான அண்டார்டிகாவில் 98 சதவிகிதம் பனி படர்ந்த கண்டம்.

அங்கு சுமார் ஒரு மைல் ஆழத்திற்கு படிந்துள்ள பனியால் அப்பகுதியில் மைனஸ் 98 டிகிரி செல்சியசுக்கும் குறைவான அளவில் கடும் குளிர் நிலவுகிறது. இந்தநிலையில் தற்போது அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் உள்ள குக் பகுதியில் பனி நிறைந்த ஏரிகள் பெருமளவில் உருக தொடங்கியுள்ளது.

பாறைகள் மற்றும் பனிப் படலங்களின் அழுத்தத்தால் வெப்பம் அதிகரித்து தண்ணீர் வெளியேறுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி படலமானது திடீரென சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஐரோப்பிய விண்கல ரேடார் அல்டிமீட்டர் கொண்டு ஆராயப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இங்கு வெளியாகும் 6 பில்லியன் டன்கள் நீரானாது தெற்கு பெருங்கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக கடலில் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் உயரும் அபாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது.








Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template