ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான கட்சியின் சார்பில் சந்திரிகாவுக்கு நெருக்கமான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களும் போட்டியிடவுள்ளனர்.
இலங்கையில் ஆகக்கூடுதலான இராணுத்தினர் வசிக்கும் பிரதேசம் என்பதால் குருநாகல் மாவட்டத்தில் தமது கூட்டணி இலகுவாக வெற்றிபெறும் என்றும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சந்திரிகாவின் ஹொரகொல்லை இல்லத்தில் நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்
ஆளும் கட்சியைச் சேர்ந்த சில கோடிக் கணக்கில் சம்பாதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய அதிகளவு மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும். எனினும், மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தேவையானளவு பணமில்லை. சிறந்த பொருளாதாரத் திட்டமொன்றை உருவாக்கியிருந்தோம். லஞ்ச ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க திட்டம் வகுத்திருந்தோம். இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நானே திட்டமிட்டேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குருணாகல் அத்துகல விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !