டேராடூன்: உத்தரகாண்ட் பேரழிவு குறித்து செய்தி சேகரிக்கப் போன நிருபர் ஒருவர், கேமராமேன் வைத்த ஆங்கிளால் வேலையை இழந்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். நாராயண் என்ற அனுபவம் வாய்ந்த நிருபர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றார்.
அப்போது வெள்ளச் சேத பகுதிகளில் நின்று, பேரழிவை குறித்து விளக்கிக் கொண்டிருந்தார் நாராயண். அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமராமேன், நாராயண் சொன்னது போல் காட்சிக்கான அமைப்பை வைக்காமல் தவறுதலாக மாற்றி வைத்து விட்டார். இக்காட்சிகளை இண்டர்நெட்டில் பார்த்த பொதுமக்கள் கொதித்துப் போய்விட்டனர். காரணம், நாராயண் வெள்ளநீருக்கு நடுவே, பாதிக்கப்பட்ட ஒருவரின் முதுகில் அமர்ந்து செய்திகளை விளக்கிக் கொண்டிருந்த காட்சிகள் தான். ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மனிதனின் தோளில் அமர்ந்து செய்திகளை விளக்குவது மனித உரிமை மீறல் என நாராயணுக்கு எதிராக கருத்துக்கள் வெடிக்க ஆரம்பித்தன.
இதனால், நாராயண் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாராயண் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்கத்தில், ‘ நானாக சென்று அந்த மனிதரது தோளில் அமரவில்லை. அவர் தானாகவே வந்து, என்னைத் தூக்கிக் கொள்வதாகவும், அதற்கு நான் ஏதாவது பண உதவி செய்தால் போதுமென்றும் கூறினார். நான் அவருக்கு 50ரூபாய் கொடுத்தேன். எனது கேமராமேனை எனது தோள்பட்டை அளவு மட்டுமே பிரேம் வைக்கச் சொன்னேன். ஆனால், அவரோ விளையாட்டிற்காக நான் அந்த மனிதரின் தோளில் அமர்ந்திருப்பது போன்று காட்சிபடுத்தி என்னை சிக்கலில் மாட்டி விட்டு விட்டார்' எனத் த்தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !