மண்டையோட்டுக்கு வெளியே மூளைக் காணப்படும்வகையில் பிறந்த குழந்தையின் மூளையானது 6 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் மண்டையோட்டினுள் வெற்றிகரமாக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது சிட்னியில் இடம்பெற்றுள்ளது.
மேரி குண்ட்ரம் என்று அழைக்கப்படும் குழந்தையொன்று மூக்கிற்கு மேல் மூளைக் காணப்படும் வகையில் பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு இத்தகையதொரு பிரச்சினைக் காணப்படுவதை குழந்தையின் தாய் கர்ப்பம் தரித்து 5 ஆம் மாதத்தில் உணர்ந்துள்ளார்.
எனினும் குழந்தை கர்ப்பத்தில் இருப்பதால் எத்தகைய சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள முடியாது என்பதால் குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தார். குழந்தை பிறந்தாலும்கூட அதற்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்டையோட்டுக்கு வெளியே மூளை காணப்படுவதால் அக்குழந்தை நோய்தொற்றுக்கு இலக்காகி உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் குழந்தை பிறந்து 7 மாதங்களில் அதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !