Headlines News :
Home » » அதி வேகம் உயிரை பறித்தது: மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி!

அதி வேகம் உயிரை பறித்தது: மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி!

Written By TamilDiscovery on Sunday, June 16, 2013 | 9:04 PM

காலி, கராப்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வேகமாக பயணித்த மோட்டார் வண்டி வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதுண்டதில் நேற்று (16) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கலேகொனவிலிருந்து கராப்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் வண்டி சாரதியும் அதில் பயணித்த நபரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி 38 வயதான மோட்டார் வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த 20 வயதான இளைஞன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காலி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template