அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பில் பணம் கிடைக்கப் பெற்றுள்ளது என பொதுமக்களுக்கு கிடைக்கப் பெறும் அநாமதேய அழைப்புக்கள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் சில நபர்கள் அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் பெருந் தொகை பணம் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவித்து மோசடிகளில் ஈடுபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கு இலக்கத்தை வழங்கி அதில் பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பண மோசடி மூலம் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் முறைப்பாடு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் குறுந் தகவல்கள் மற்றும் தகவல்கள், கிடைக்கப் பெறும் பட்சத்தில் உடனடியாக பொலிசாருக்குதெரிவிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !