யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு குறிப்பறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
யாழில் சென்ற 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக் காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள், விவகாரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தை இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப் பதிவேடு குறிப்பறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், பாடசாலை மட்டத்திலிருப்பவர்களுக்காக தற்கொலை மற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டயத் தேவை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
யாழில் மதுபோதையில் நாய்யைக் கடித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்கைக்கான அனுமதிப்பு
யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாய்யைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து வேளை அவரைத் துரத்திய நாயை தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாயை கடித்துக் குதறியுள்ளார்.
இதனால் நாய்க்கு முகத்தில் காயமடைந்துள்ளது. அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த இளைஞன் யாழ்.திருநகர் இராஜேந்திரா வீதியைச் சேர்ந்த எஸ்.டேவிற்ராஜ் (வயது 26) என்ற இளைஞனே நாயைக் கடித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !