ஜப்பானின் புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்ட புதிய கசிவொன்று பசுபிக் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் என அந்த அணுசக்தி நிலையத்தை செயற்படுத்தி வரும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட இந்த அணுசக்தி நிலையத்தின் சேமிப்பு தாங்கிகளிலொன்றிலிருந்து பெருமளவு நீர் வெளியேறியுள்ளமை புதன்கிழமை இரவு பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தாங்கியிலிருந்து 480 லீற்றர் கதிர் வீச்சு தன்மையுடைய நீர் வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி நச்சுத் தன்மையுடைய நீர் கால்வாயினூடாக சென்று சமுத்திரத்தை சென்றடைந்திருப்பதற்கான சாத்தியப்பாட்டை தம்மால் மறுக்க முடியாதுள்ளதாக டோக்கியோ மின்சக்தி கம்பனியின் அதிகாரி மஸயுகி ஓனோ தெரிவித்தார்.
அந்தத் தாங்கியில் எந்தளவுக்கு நீரை சேமிக்க முடியும் என்பதை பணியாளர் ஒருவர் தவறாக மதிப்பீடு செய்தமை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் அந்நாட்டு தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிஹிட் சுகா விபரிக்கையில், இந்தக் கசிவுகள் டோக்கியோ மின்சக்தி கம்பனி கதிர்வீச்சு தன்மையுடைய நீரை கையாளுவதில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளதென தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !