அமெரிக்க உளவு நிறுவனங்கள் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தொலைபேசி எண்களைப் பெற்று, சுமார் 35 உலக தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உலகத் தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானதால் அவர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தொடர்பு கொண்டார் ஏஞ்சலா. அப்போது ஏஞ்சலாவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்று ஒபாமா கூறி சமாதானம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஒட்டுக்கேட்பு நடவடிக்கையால் இந்திய பிரதமர் கவலை அடைந்துள்ளாரா? என்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த அவரது செய்தித் தொடர்பாளர், “பிரதமர் மன்மோகன் சிங் செல்போன் பயன்படுத்தவில்லை. அவரது அலுவலகம் தனியாக இமெயிலை பயன்படுத்துகிறது. அவருக்கென தனிப்பட்ட இமெயில் கணக்கு இல்லை. எங்களிடம் எந்த தகவலும் இல்லை, அதனால் கவலைப்பட தேவையில்லை” என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !