Headlines News :
Home » » பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

Written By TamilDiscovery on Friday, October 25, 2013 | 10:24 PM

இந்தியாவில் பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டள்ளார்.

மஹாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுனில் தஹிவால். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அடிக்கடி தன்னுடைய செல்போன் மூலமும், இணையதளத்தின் பேஸ்புக் தொடர்பு மூலமும் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளார்.

இதனால் மகளின் படிப்பு பாழாகுமே என அஞ்சிய பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதனன்று இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

அதனைக் கண்ட பெற்றோர் வழக்கம்போல கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் தன்னை சுதந்திரமாக இயங்க விட மாட்டேன் என்கிறார்களே என மனமுடைந்த ஐஸ்வர்யா, ‘இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது´ என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டர். இது குறித்து பர்பானி பகுதியில் உள்ள நனல்பெத் காவல்நிலையத்தின் புலனாய்வு அதிகாரியான ஜி.எச்.லெம்குடே கூரும் போது,

‘பெற்றோர்கள் தங்களுடைய மகளின் மேல்கொண்ட அக்கறையினால் கூறியதற்கு நடந்துள்ள விபரீதம்´ எனக் குறிப்பிட்டிள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template