யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சசிலியாமா கிரேட் என்பவர், கடன்தொல்லை காரணமாக இரண்டு பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது:
சசிலியாமா கிரேட்டின் மகள் மற்றும் மருமகன் ஆகிய இரண்டு பேரும், வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் கடனை திரும்பி கொடுக்க முடியாமல் அங்கிருந்த தாயிடம் இரண்டு குழந்தைகளையும் கொடுத்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் சசிலியாமா கிரேட்டிடம் தொடர்ந்து கடனை கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
அச்சமடைந்த சசிலியாமா கிரேட் தனது மகள் குழந்தைகள் ஜாக்கி, ஜெக்சன் இரண்டு பேருடனும், தலைமன்னாரில் இருந்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு, அங்குள்ள பிளாஸ்டிக் படகை நாடியுள்ளார்.
அவர்கள் 15 ஆயிரம் பெற்றுக்கொண்டு, தனுஸ்கோடி அரிச்சமுனைக்கு வந்து இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
தகவல் கிடைத்த கடலோர காவல்படை குழும காவல்துறை உதவி ஆய்வாளர் ஜோதிபாஸ் மற்றும் பொலிசார் சென்று இலங்கை பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூன்று பேரையும் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் காவல்துறை மற்றும் க்யூ பிரிவு பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
பல ஆண்டுகளுக்கு முன் அகதியாக திருச்சியில் இருந்ததாகவும், தனது மகள் குழந்தைகளை காப்பாற்றவே இந்திய அரசை நம்பி வந்ததாகவும் சசிலியாமா கிரேட் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !