நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்-கயல்விழி திருமணம் இன்று சென்னையில் நடந்தேறியது.
மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. அவருக்கும், சீமானுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் பழ. நெடுமாறன், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று காலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி திருமணம் நடந்தேறியது. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். பல்வேறு தமிழர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பல்துறை பெருமக்கள் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்காக சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண ஏற்பாடுகளை இயக்குநர் அமீர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையிட்டு கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் தனக்கென ஒரிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும், தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் சீமான் இருந்து வந்துள்ளார். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார்.
மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டொலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ. நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார்.
திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாலை முரசு இயக்குனர் கண்ணன்
ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், ரித்தீஷ்
எம்.பி, சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
கரு.நாகராஜன், பா.ஜனதா தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை, மாநில செயலாளர்
வானதி ஸ்ரீனிவாசன், ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை
கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !