அதை நேரில் பார்த்துக் கொதித்துப் போன கணவர், கள்ளக்காதலனை சரமாரியாக குத்திக் கொன்று விட்டார். சென்னை ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ராமதாஸ் தெருவில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அங்கு வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி புவனேவஸ்வரி. இவருக்கு 27 வயதாகிறது.
அதே பகுதியில் காய்கறிக் கடை வைத்திருந்தவர் சதீஷ். இவருக்கும் 27 வயதாகிறது. சதீஷ் கடைக்கு அடிக்கடி போய் காய்கறி வாங்குவார் புவனேஸ்வரி. அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
புவனேஸ்வரிக்கு 2 மகள், ஒரு மகள் உள்ளனர். ஆனால் அது கண்ணை மறைக்க சதீஷுடன் தொடர்பைப் பேணி வந்தார். அடிக்கடி சதீஷுடன் தனிமையில் சந்தித்து இருந்துள்ளார். இது சக்திவேலுக்குத் தெரிய வந்தது. கோபமடைந்த அவர் மனைவியைக் கண்டித்தார். சதீஷையும் கூப்பிட்டு எச்சரித்தார்.
இருந்தும் புவனேஸ்வரி விடவில்லை. இதனால் சக்திவேலுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சண்டை வரும்போதெல்லாம் சக்திவேல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் புவனேஸ்வரி. பக்கத்து தெருவில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்குப் கொண்டு போய் பிள்ளைகளை விட்டு விட்டு சதீஷை வீட்டிற்கு வரவளைத்துள்ளர். இந்த வசதிக்காகவே அடிக்கடி அவராகவே சக்திவேலுடன் சண்டை பிடித்து அவரை வெளியேறச் செய்து விடுவதும் வழக்கமாம்.
இதேபோல 2 நாட்களுக்கு முன்பும் சண்டை ஏற்பட்டு சக்திவேல் வெளியே போய் விட்டார். உடனே பிள்ளைகளை பேக்கப் செய்து தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு சதீஷுக்குத் தகவல் அனுப்பி வரவைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவு வாக்கில் மது அருந்திய நிலையில் சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளார். இதை சதீஷ், புவனேஸ்வரி எதிர்பார்க்கவில்லை. இருவரும் படுக்கையில் இருந்ததை ஜன்னல் வழியாக பார்த்து விட்டார் சக்திவேல்.
அவ்வளவுதான், அவர் கதவைத் திறந்தார். அப்போது சதீஷ் தப்பியோட முயன்றார். ஆனால் அவரை மடக்கிப் பிடித்த சக்திவேல் கீழே கிடந்த கயிறை எடுத்து கழுத்தில் சுற்றி படுவேகமாக இறுக்கினார். இதில் சுருண்டு விழுந்தார் சதீஷ். பின்னர் கத்தி ஒன்றை எடுத்து சரமாரியாக வெறி கொண்டு குத்தினார் சக்திவேல். இதில் சதீஷ் இறந்து போனார். அடுத்து புவனேஸ்வரியை குத்த அவரைத் தேடினார். ஆனால் அதற்குள் அவர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.
இதனால் ஏமாந்து போன சக்திவேல், போலீஸுக்குத் தகவல் தெரிவித்து சரணடைந்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !