சிங்கப்பூரில், வக்கீல் மனைவியை திட்டமிட்டுக் கொன்றதாக இந்திய வக்கீல் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் ரெங்கராஜ் பாலசாமி. வக்கீலான இவரது மனைவி லோவ் பூங்யங் (56) சீனாவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். கடந்த 2011-ம் ஆண்டில் வக்கீல் அலுவலகம் தீ வைக்கப்பட்டது. லோவ் அந்த தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். லோவ் மரணம் கொலை என சந்தேகிக்கப்பட்டது.
இதில், இந்திய வம்சாவளி வக்கீலான கோவிந்தசாமி நல்லையா (66) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததால், அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, 58 பேர் சாட்சி சொல்ல இருக்கிறார்கள். மேலும், தீ விபத்தின் போது எடுக்கப் பட்ட வீடியோ காட்சிகளும், தடயவியல் ஆய்வாளார்களின் சாட்சியும் சமர்பிக்கப் பட உள்ளது. கோவிந்தசாமியின் குற்றம் நிரூபிக்கப் பட்டு நீதிமன்றம் எத்தகைய தண்டனை கொடுத்தாலும், அது தான் பெற்ற இழப்புக்கு ஈடாகாது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ரெங்கராஜ் பால்சாமி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !