குறித்த சிலந்தி இனமானது 'Ctenus monaghan' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆவணப்படமொன்றினை தயாரித்துக்கொண்டிருக்கும் போதே ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சிலந்தியானது வெறும் 0.4 அங்குலமென்பது குறிப்பிடத்தக்கது.
இவை தனது இரையை பிடிப்பதற்காக வலை எதனையும் உருவாக்குவதில்லையெனவும் மாறாக இரையை தேடி அலைவனவெனவும் தமது பார்வையில் சிக்கும் இரையை பிடிப்பனவெனவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தென்கிழக்காசியாவில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக ஆராய்ச்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அழிவின் விழிம்பில் இருக்கும் பல்வேறு தவளை மற்றும் பல்லியினங்களை ஆராய்ச்சியாளர்கள் அங்கு கண்டுபிடித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !