சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர்.
உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக் கூடியவை. ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதற்கு கிரோபோ என பெயரிட்டுள்ளனர்.
33 செ.மீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோ ஜப்பான் மொழியில் பேசக்கூடியது. இதை ஜப்பானின் கிபோ ரோபாட் நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. எனவே, இதற்கு கிரோபா என பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோ தற்போது சர்வதேச விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர் போன்றவை ஜப்பானின் தனேகஷிமா தீவில் உள்ள தளத்தில் இருந்து எச்2பி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.
அதனுடன் சேர்த்து இந்த ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஜப்பான் வீரர் கெர்ங்சி வகாடா சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் தனிமையில் இருக்கும்போது, அவருடன் இந்த ரோபோ பேச்சு கொடுக்கும். இதன் மூலம் அவரது தனிமை கவலையை நீங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !