பல மாதங்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் நாற்காலியை பிடித்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. 'உறுப்பினர்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். உட்கார விட்டாதானே? சேரை புடிச்சு இழுக்கறதே இவங்களுக்கு வேலையா போச்சு. இப்ப சொல்றேன். கேயார் தேர்தல்ல நின்னா நான் அவரை எதிர்த்து நிப்பேன்' என்று நாலு மாதங்களுக்கு முன்பு சூளுரைத்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.
கேயாரும் விடுவதாக இல்லை. எஸ்.ஏ.சி யும் நகர்வதாக இல்லை. மறுபடியும் ஒரு 'கோதா' நடக்க போகிறது இங்கே. அதற்கான வியூகங்களை இப்பவே வகுக்க ஆரம்பித்துவிட்டாராம் எஸ்.ஏ.சி.
மீனுக்கு தூண்டில் போடுவது வாடிக்கைதான். இந்த முறை மீன்களுக்கு இறைக்கவிருப்பது சோளப்பொரியோ, அவல் பொரியோ இல்லை. அதையும் தாண்டி சிக்கன் சிக்ஸ்டீஃபைவ் போட்டு வளைக்கிற திட்டத்திலிருக்கிறாராம் எஸ்.ஏ.சி.
தயாரிப்பாளர் சங்க பொருளாளர் பதவிக்கு வழக்கம் போல தாணு நிற்பார். தலைவருக்கு எஸ்.ஏ.சி நிற்பார். வாக்குறுதி என்ன தெரியுமா? 'எங்களை வெற்றி பெற வைத்தால் விஜய்யின் கால்ஷீட் தாணுவுக்கு தரப்படும். துப்பாக்கி மாதிரி பிரமாண்டமாக ஒரு படத்தை எடுப்போம். அதில் கிடைக்கிற லாபம் சங்க உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்'. இதுதான் கவர்ச்சிகரமான வாக்குறுதியாக இருக்குமாம் இந்த தேர்தலில்.
செலவெல்லாம் போக விஜய் படத்தின் லாபம் மட்டும் முப்பது கோடிக்கு குறையாது. ஓட்டு போட தகுதியுள்ள சங்க உறுப்பினர்கள் சுமார் தொள்ளாயிரம் பேர். இந்த முப்பது கோடியை தொள்ளாயிரம் பேருக்கு பிரிச்சு கொடுத்தா எவ்வளவு தேறும்? இந்த கூட்டல் கழித்தல் கணக்கை மனக்கணக்காக போட்டு பார்த்து கனவு காண ஆரம்பித்திருக்கிறார்கள் உறுப்பினர்கள்.
இதெல்லாம் கால்ஷீட் கொடுக்கப் போகும் விஜய்க்கு தெரியுமா என்பதுதான் எதிர் கோஷ்டியின் டாப் மோஸ்ட் சந்தேகம்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !