லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.
34 வயதுடைய பிரசன்னா அருள்செல்வம் எனும் இளம் தந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக லண்டன் புனித.மேரிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் பிரன்னாவின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதற்கு சாட்சியாளர்களின் உதவியினையும் கோரியுள்ளனர்.
தனது சகோதரனின் மரணம் தொடர்பாக கருத்துவெளியிட்ட உதய்,
நாம் அனைவரும் மனம் உடைந்து போயுள்ளோம். என் சகோதரனைப் பற்றி வார்த்தைகளால் கூற இயலாது அவர் மிகவும் நல்லவர். இவ்வாறானதோர் மரணம் எந்த குடும்பத்திலும் நிகழக்கூடாது. என் சகோதரனிற்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் 'கொஸ்கோ சந்தையின்' வாகனத் தரிப்பிடம் மிகவும் நெரிசலாகவே இருக்கும். இவ்விபத்தை யாரெனும் ஒருவர் நிச்சயம் கண்ணுற்றிருப்பார். மேற்படி குறித்த நபரான அருட்செல்வம் அவர்களை 'நைக்' எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
இவர் 1998ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் ரெஸ்கோ நிறுவன்த்தில் சேவை புரிந்து விலகியதன் பின்னர் தன்னுடைய சகோதரனான உதய் உடன் இணைந்து சொந்த வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தன்னுடைய முதலாவது வியாபார நிலையத்தை பேஸ்வொட்டர் லண்டனில் திறந்தார். அதன் பின்னர் இரண்டாம் வியாபார நிலையத்தை சிட்டிங்பேர்ன் கென்டில் திறந்ததுடன் மூன்றாம் நிலையத்தை சவுத்தம்டனில் திறப்பதற்கு எதிர்பார்த்திருந்தார். 4 ஆண்டுகளிற்கு முன்னர் ஷயந்தியுடன் திருமணபந்தத்தில் இணைந்தார். இத்தம்பதியிற்கு பிரணவ் எனும் இரண்டு வயது மகன் உள்ளார்.
உதய் மேலும் தெரிவிக்கையில்,
எனது சகோதரன் வியாபார நிலையத்திற்கு வேண்டிய சிகரட்டுக்களை கொள்வனவு செய்யும் பொருட்டு 'கொஸ்கோ கொள்வனவு நிலையத்திற்கு' தன்னுடைய சில்வர் நிற வானில் நீல வெள்ளை நிற போலோ டி-சேர்டும் ஜின்ஸ் மற்றும் மண்ணிற சப்பாத்து அணிந்து பி.ப 2.45 மணியளவில் சென்றார்.
இவ்விபத்து தொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் அதிகாரி ஜெரோம் அவர்கள்,
இத் துரதிஷ்ட சம்பவத்தினால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்திடீர் விபத்து தொடர்பில் குடும்பத்தார் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உறுதியான தகவல்களை பெறுவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். இவ்விபத்திற்கு முன்னர் அல்லது பின்னர் வெள்ளை நிற வான் ஒன்று இவ்வாகன தரிப்பிடத்திலிருந்து ஹர்ட்ஸ்பிரிங் வழியே வெயியேறுவதை எவரேனும் கண்ணுற்றிருந்தால் கென்ட் பொலிஸ் நிலையத்துடன் 01707 355959 அல்லது 0800 555 111 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளவும். உங்களுடைய விபரங்கள் மிகவும் இரகசியமாகவே பேணபடும் என அவ்வதிகாரி தெரிவித்தார்.
மேலும் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தால் 50 000 பிரித்தானிய பவுண்ட்ஸ் ரொக்க சன்மானம் வழங்கப்படும் என பிரித்தானிய குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !