மறைந்த அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் 2002ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தானில் தங்கியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, பின்லேடன் எவ்வளவு காலம் இருந்தார் என்பதை அறிந்து கொள்வதற்காக கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையை, பிரபல நாளிதழான டான் இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஒசாமா பின்லேடனின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் அவனது வலதுகரமாக விளங்கிய காலித் பின் அட்டாஷ் என்பவனுடன் 2001ம் ஆண்டில் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு வந்துள்ளனர்.
2002ம் ஆண்டில் கராச்சியில் அட்டாஷ் கைது செய்யப்பட்டான்.
இவனது கையாள் அபு அஹமத் அலி குவைத்தி என்பவனை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. 2002ம் ஆண்டில் இருந்து உளவு பார்க்க தொடங்கியது. அப்போது 2009-2010ம் ஆண்டுக்கு இடையில் அவன் ஒரு குறிப்பிட்ட செல்போனுக்கு தொடர்பு கொண்டு வந்ததும், எதிர்முனை எப்போதும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதும் உளவுத் துறையினருக்கு தெரிய வந்தது. எதிர்முனையில் அவன் தொடர்பு கொள்ள முயற்சித்த நபர் யார்? என்பது தொடர்பாக குழப்பத்தில் இருந்து சி.ஐ.ஏ. அதிகாரிகள் அது ஒசாமா பின்லேடன் தான் என்பதை சாதுர்யமாக கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான். எனவே 2002ம் ஆண்டில் இருந்தே அவன் பாகிஸ்தானில் தங்கியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home »
World
» அமெரிக்காவின் சிறப்புப் படையணியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் குறித்த புதிய தகவல்கள் வெளியானது!
அமெரிக்காவின் சிறப்புப் படையணியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் குறித்த புதிய தகவல்கள் வெளியானது!
Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 6:58 AM
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !