காமா-கொழும்பு இரவு களியாட்ட விடுதியானது சட்டவிரோதமானதாகும். அங்கு மது அருந்துவதற்கு சட்டரீதியான அனுமதி பத்திரம் எதுவுமில்லை. இந்த இரவு களியாட்ட விடுதியானது சட்டவிரோதமான முறையிலேயே இயங்கியுள்ளது என்று கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
காமா- விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த மதுபான அனுமதிப்பத்திரம் கடந்த ஜுன் மாதத்துடன் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அங்கு சட்டரீதியாக மதுபானங்களை அருந்த முடியாது. மதுபான அனுமதிப்பெற்ற உரித்துடையவரின் கோரிக்கைக்கு அமைவாகவே அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த இரவு களியாட்ட விடுத்தியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கைகலப்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கடும் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் உட்பட அடியாட்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !