தனது 6 மகள்மாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 6 குழந்தைகளுக்கு தாயாக்கிய விருதுகள் பல வென்ற அமெரிக்க இசையமைப்பாளரான அஸ்வத் அயின்டிக்கு 90 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
நியூ ஜெர்ஸியில் பற்றர்ஸன் எனும் இடத்தைச் சேர்ந்த அஸ்வத்திற்கு தனது 6 மகள்மாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தாயாக்கிய குற்றச்சாட்டில் 50 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்க னவே 2011 ஆம் ஆண்டில் பிறிதொரு மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இ மொத்தமாக 90 வருட சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது இரண்டாவது மகளை 8 வயது சிறுமியாக இருக்கும் போது பாலியல் வல்லுறவுக்குட்படுத்த ஆரம்பித்து அவரை 4 தடவைகள் கருத்தரிக்கச் செய்துள்ளார்.
புஜீஸ் இசைக்குழுவின் இசையமைப்பாளரான அஸ்வத்இ 1996 ஆம் ஆண்டு வெளியான 'கிலிங் மீ சொப்ட்லி' பாடலுக்கு இசையமைத்தன் மூலம் உலகப் பிரபலம் பெற்றார். மேற்படி பாடலானது 1996 எம்.ரி.வி. வீடியோ பாடல் விருது வழங்கும் வைபவத்தில் மிகச் சிறந்த வீடியோ பாடலுக்கான விருதை வென்றது.
அஸ்வத் தனது மனைவியல்லாத 3 பெண்கள் மூலம் மேலும் 12 குழந்தைகளுக்கு தந்தையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !