பிரிட்டன் இளவரசர் வில்லியமின் குழந்தையை ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் பார்க்கிறேன் என ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை பிரிட்டன் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி, 21ம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் குழந்தையாக இது இருக்கப் போகிறது.
எனவே இதன் பிறப்பை ரஷ்யர்கள் கொண்டாடக் கூடாது, வரவேற்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவை அழித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். எனவேதான் இந்தக் குழந்தையின் பிறப்பை எங்களால் கொண்டாட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை வரவேற்றுள்ளது ரஷ்ய அரசு. இதுதொடர்பாக வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத்துக்கு ரஷ்ய அரசு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !