பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தந்தையை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் ரி. சரவணராஜா எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் தாய் வெளிநாடு ஒன்றிற்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.
இதனையறிந்து பாட்டி அக்கரைப்பற்று பொலிஸில் கடந்த புதன்கிழமை செய்த முறைப்பாட்டையடுத்தே அன்றிரவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சிறுமிக்கு இளைய சகோதரர்கள் இருவர் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !