நடமாடும் விபசார நிலையமொன்றினை சுற்றிவளைத்த வலானை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த விபசார நிலையத்தினை நடத்தி வந்த பெண் அடங்கலாக ஐவரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை கொழும்பு, கொம்பனித்தெருப் பகுதியில் வேன் ஒன்றில் குறித்த பெண்களை விபசாரத்துக்கு அழைத்துச்சென்ற வேளையிலேயே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
வாகனம் மூலமாக நடமாடும் விபசார நிலையமொன்றை மிகவும் சூட்சுமமாக கொண்டு நடத்துவதாக கொழும்பு வலானைப் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த பெண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் களனி, தம்புள்ளை, களுத்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வலானைக் குற்றப் புலனாய்வு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !