ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்திய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார நவகத்தேகமபொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் குறித்த உறுப்பினரின் மகள் கல்வி கற்றுவருகின்றார்.
இந்நிலையில் அவரின் மகள் அணிந்து வந்த ஆடையானது பாடசாலை விதிமுறைகளுக்கு முரணாக இருந்த காரணத்தினால் குறித்த ஆசிரியை இது தொடர்பில் அம் மாணவியைக் கண்டித்துள்ளார்.
அம்மாணவி இவ்விடயத்தை தனது தந்தையான ஆனந்த சரத்குமாரவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த சரத்குமார பாடசாலைக்கு வருகைதந்துள்ளதுடன் ஆசிரியை முழங்காலில் நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடையையடுத்து ஆனந்த சரத்குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !