ஒரு வருடமாக நடந்து வந்த அஜித்தின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிந்துவிட்டது.
அஜித் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள, இந்த படத்தின் வேலைகள் எப்பொழுது முடியும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அஜித்தும் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் ஆரம்பித்து விட்டார். அஜித் படத்தின் படப்படிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது என்று கூறப்படுகிறது. போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் நடந்துள்ளது. இந்தநிலையில் படத்திற்கு எப்பொழுது தான் பெயர் வைப்பார்கள் என்று இரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.
படம் ஆகஸ்ட் 15ம் திகதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனாலும் படம் செப்டம்பர் முதல் வாரத்தில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !