வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுச் சென்ற 48 வயது நபரொருவர் மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது அவரை பலத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச் சம்பவம் கற்பிட்டிப் பகுதியிலுள்ள ஆலங்குடா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவியின் உறவினர்களால் கற்பிட்டி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கற்பிட்டிப் பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்து புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம். எம். இக்பால் முன் ஆஜர் செய்தனர்.
பதில் நீதிவான் சந்தேக நபருக்கு நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு பணித்து மேலதிக விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !