அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்தது. இது இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக எண்ணை நிறுவனங்களுக்கு லேசான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை சற்று உயர்த்த முடிவு செய்துள்ளனர். பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு தடவை அதாவது 1-ந் திகதி மற்றும் 15-ந் திகதி மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. டீசலுக்கான மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் கடந்த ஜனவரி மாதம் முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் டீசல் விலை 50 காசு உயர வாய்ப்புள்ளது. இன்றிரவு இந்த விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது. கடைசியாக கடந்த 31-ந் திகதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !